ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
சுகாதார உணவுடன் புழல் (சிறையில்) பங்களா வாழ்க்கை !
கோவை மோன்ராஜூ க்கு கொடுத்த என்கவுண்டருடன் குழந்தைகள் கடத்தல் முடிவுக்கு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர், அதை இன்னும் உறுதி படுத்திக்கொள்வதற்காக அதற்கடுத்து சென்னை மாணவன் கீர்த்திவாசன் கடத்தலில் விஜய், பிரபுவுக்கு வழங்கப்படும் தீர்ப்புடன் அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்தி வாசனின் தந்தை செலுத்தும் வரிப்பணத்தில் கீர்த்தி வாசனைக் கடத்தியவர்களுக்கு ஒரு வருடம் சுகாதார உணவும், புழல் பங்களாவில் பாதுகாப்பு வாழ்க்கையும். என்றத் தீர்ப்பைக் கேட்டு பெற்றோர்கள் ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர்.
குழந்தைகளை கடத்தி வைத்துக் கொண்டு கொலை செய்து விடாமல், பாலியல் பாலாத்காரம் செய்து விடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிக்கலாம் மீறிப் பிடிபட்டால் புழல் பங்களாவில் பாதுகாப்பாக சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற நிலைக்கு குழந்தை கடத்தல் சமாச்சாரம் இந்த தீர்ப்பால் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த குழந்தை கடத்தல் கேடிகள் ஒரு வருடம் ஜாமீனில் வெளியில் வர முடியாது என்பதைத் தவிற வேறு எந்த பாதிப்பும் இவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏற்படாது.
காரணம் உறக்கமும், உணவும் போக வெளியில் கிடைக்கும் அனைத்தும் புழல் சிறையிலும் கிடைக்கும். அவைகளை வெளியிலிருந்து யாரும் சிரமப்பட்டு உள்ளேக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சிறை வார்டர்களே பெரும் தொகைக்கு சப்ளை செய்து வந்ததை பலமுறை புழல்சிறை வார்டர்கள் பிடிபட்டது நினைவிருக்கலாம்.
சோலார் முறையில் இயங்கக் கூடிய செல்போன் வெளி மார்கெட்டில் வருவதற்கு முன் புழல் சிறைக்குள் வந்து அதில் மிகவும் லாவகமாக பெரிய இடத்து கைதி ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்ததாக படித்திருக்கிறோம்.
சிறை கைதிகளில் பைசா பார்ட்டிகள் பலர் புழல் சிறைக்குல் சொகுசு வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்பது நாம் எழுதி தெரிய வெண்டிய செய்தியல்ல நாடறிந்த செய்தியாகும்.
சிறுவன் கீர்த்தி வாசனை கடத்தி வைத்துக்கொண்டு மூன்று கோடி ரூபாய் பேரம் பேசியது என்பது சாதாரண விஷயமா ? அது சாதாரணத் தொகையா ? வசதி இருப்பவர்களிடம் தான் இவ்வாறு பணம் பறிக்கும் சதி திட்டம் நடக்கிறது என்றாலும் இந்த மோசடியில் ஈடுபட்ட இவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களா ? படிக்காமல் ப்ளாட் பாரங்களில் பெறுக்கிக் கொண்டுத் திரிந்தப் போக்கிரிகளா ? வசதியான குடும்பத்தில் பிறந்து, தரமான கல்விப் பயின்று, லண்டன் சிங்கப்பூர் போன்ற மேலைநாடுகளுக்கு சென்று வேலைப் பார்த்து கை நிறைய சம்பாதித்தவர்கள்.
கைநிறைய கிடைத்தாலும் மடி நிறைவதற்குத் தாமதமாகிறது என்றுக் கருதி குறுகிய காலத்தில் குபேரர்களாகி விடுவதற்காக கீர்த்தி வாசனைக் கடத்தி பேரம் பேசும் ஈனச் செயலில் ஈடுபட்டதாக அவர்களே ஒத்துக் கொண்ட பொழுது இவர்களுக்கு இந்த தண்டனை போதுமா ? இது தண்டனையா ?
படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் இவர்களைப் போலவே ஈனச்செயல்களில் ஈடுபடத் துணிந்தால் இளைஞர்களின் எதிர் காலம் என்னவாகும் ?
இவர்களுக்கும் என்கவுண்டர் தான் சரி என்று நாம் சொல்ல வரவில்லை, ஆனாலும் உயிருக்கு விலை வைத்தவர்களுக்கு, தரமான கல்விக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களுக்கு, பட்டதாரிகளுக்கு தலைகுணிவை ஏற்படுத்திய இவர்களுக்கு ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை எல்லாம் எங்கே சென்றது என்பது தான் நமது கேள்வி ?
முஸ்கின், ரித்தீக் படுகொலையை கண்டித்து கோவை மாநரமே திரண்டதால் தான் மோகன் ராஜ் என்கவுண்டரும்;, அதைத் தொடர்ந்து இவர்களுக்கு ஒரு வருடம் குண்டர் சட்டமும் வந்தது. இல்லை என்றால் மோகன் ராஜூம் இதுவரை ஜாமீனில் வந்திருப்பான் இவர்களும் வந்திருப்பார்கள்.
இதே தாடி வைத்த ஒரு முஸ்லீம் சந்தேக கேஸில் மாட்டினால் கூட அவரை மாஜிஸ்திரேட்டிடம் கொண்டுப் போய் நிருத்துவதற்கு முன் அநியாயமாக பாதி உயிரை எடுத்து விடுகிறார்கள், அவரையும், அவரது பெற்றோரையும், அவர் சார்ந்த மார்க்கத்தையும் அந்த எஸ்.ஐ ஏக போக வசனத்தில் திட்ட வில்லை என்றால் அன்று அவருக்கு உறக்கம் மட்டுமல்ல மல,ஜலமேப் போகாது.
இந்த நாட்டில் என்று மலருமோ ஜனநாயகம் ?
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.